நான்கு யோகங்கள்
இந்த நான்கு யோகங்கள் பூஜையின் முக்கியமான அங்கம்
ஜப யோகம்
கீழ் கண்ட நாமாக்களை மூன்று தரம் கூறவும்
ஓம் மகாலக்ஷ்மியை நமஹ
ஓம் கஜலக்ஷ்மியை நமஹ
ஓம் ஜெயலட்சுமியை நமஹ
ஓம் தனலக்ஷ்மியை நமஹ
ஓம் சந்தானலக்ஷ்மியை நமஹ
ஓம் சீதாலட்சுமியை நமஹ
ஓம் தைர்யலக்ஷ்மியை நமஹ
ஓம் தான்யலக்ஷ்மியை நமஹ
ஓம் வித்யாலக்ஷ்மியை நமஹ
ஓம் மகாவிஷ்ணு மகாலக்ஷ்மியை நமஹ
தாரணா யோகம்
அன்னையின் உருவத்தை கண்களால் பார்த்து மனதில் பதித்தல்உங்கள் முன் உள்ள மகாலக்ஷ்மியின் உருவத்தையும் தீபத்தையும் பார்த்து மனதில் பதியவைக்கவும் (ஒரு நிமிடம்)
த்யான யோகம்
அன்னையின் உருவத்தை கண்ணை மூடிக்கொண்டு மனதில் த்யானம் செய்தல் பின் உடல் முழுவதும் அன்னையின் உருவம் பரவி நாமே அன்னையின் உருவமாக மர்றுவதாக எண்ணுதல் ( இரண்டு முதல் மூன்று நிமிடம் வரை)
மஹா யோகம்
அவ்வாறு மாறிய பின் உலகு எங்கும் உள்ள உயிரினங்கள்
அனைத்தும் மகாலக்ஷ்மியின் உருவமாக பார்க்கவும்
அனைவரும் அனைத்து செல்வங்களையும் பெற்று அமைதிடனும் மகிழ்ச்சயுடனும் வாழ பிரார்த்திக்கவும்
(இரண்டு நிமிடம்)
பிரார்த்தனை
உலகெல்லாம் நிறைந்த தாயே எல்லா உயிரும் நீ எல்லா செல்வமும் நீ எல்லாவற்றையும் நடத்துவது நீயே
உனது அருள் எப்பொழுதும் எங்களை காத்து நிற்கின்றது
இந்த உண்மையை நாங்கள் உணர அருள் புரிவாய் அம்மா
பசிக்கு உணவாவை பருகும் நீர் ஆவாய்
நோய்க்கு மருந்தாவாய் இருள் போக்கும் ஒளியே
வறுமை நீக்கும் செல்வமே
தவமும் ஞானமும் உனது நன்கொடைகள்
அன்பும் அறமும் உனது அரும் கலை படைப்புக்கள்
அன்னையே ஆதிசக்தியே உன்னில் பிறந்து உன்னில் வளரும்
என்னை உனதாக்கி உய்ய அருள் புரிவாய் அம்மா !
ஓம் தத் ஸத்